குறுகிய பெரும்பான்மையில் ஒற்றுமை அரசு சிறப்பாக நாட்டை வழி நடத்துகிறது
2018 முதல் 2022 வரை நான்கு ஆண்டுகாலத்தில் 3 பிரதமரை மலேசிய கண்டது. ஆனால் கடந்த 36 மாதங்களாக நிலையான ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தை விட ஒற்றுமை அரசு ஆட்சிக் காலத்தில் நாட்டில்,
இனத் தீவிரவாதம் குறைந்துள்ளது.
மதத்தீவிர வாதம் குறைந்துள்ளது.
அரசியல் சர்ச்சைகள் கட்டுப் பாட்டில் வைத்திருக்கின்றது.
பொருளாதார முன்னேற்றம் வலுவடைந்துள்ளது.
நாட்டின் நாணய மதிப்பு கட்டுப் பாட்டில் வைத்துக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக கொண்டு வரப்பட்ட அந்நிய நாட்டு முதலீட்டுகள் பன் மடங்கு அதிகரித்துள்ளது.
அந்நிய தொழிலாளர் வருகை கட்டுப் பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
9 அரச குடும்பங்கள் நாட்டின் மேம்பாட்டுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
பாஸ் கட்சி மற்றும் பெர்சத்து கட்சிகள் கொடுக்கும் அரசியல் நெருக்கடிகளை முறையாக கலைந்து வருகிறது.
ஆக மொத்தத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நல்லாட்சியை கொடுத்து வருகிறது.
நாட்டில் அமைதி நிலை நாட்டப் படுகிறது. உலக நாடுகளுடன் அனுக்கமான உறவை வளர்த்து வருகின்றது. வெற்றிகரமாக ஆசியான் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றது.
மலேசியாவின் முக்கிய வாணிப பங்காளிகளான சிங்கப்பூர், இந்தோனேசிய, தாய்லாந்து, இந்தியா, சீனா, அமெரிக்கா, இஸ்லாமிய நாடுகளுடன் நல்ல உறவையும் வாணிபத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறது.
சபா, சரவாக் மாநில மக்களின் அதிருப்தியை விவேகமாக கையாண்டு வருகிறது மத்திய அரசு.
இப்படி எல்லாத்துறைகளிலும் சிறப்பாக வழினடத்தி வருகிறார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
நாட்டில் அவ்வப்போது நடக்கும் ஒரு சில சமூக பிரச்னைகளை எதிர்க் கட்சிகள் பூதகரமாக்கிக் கொண்டிருக்கிறது.
சமூக நல்லிணக்கம், அமைதி, பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவை பாராட்ட தக்க வகையில் ஆட்சி நடத்தப் படுகிறது.
சுப்பையா சுப்ரமணியம்.
சமூக அர்வலர்







