ad

கனடா உடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படும் - டிரம்ப்

24 அக்டோபர் 2025, 8:50 AM
கனடா உடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படும் - டிரம்ப்

வாஷிங்டன், அக் 24 - கனடா உடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும், உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்தார்.

மேலும், முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் வரி தொடர்பான விளம்பர பிரச்சார அறிக்கையை கனடா திரித்துக் கூறுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

வரி விதிப்பு குறித்து எதிர்மறையாகப் பேசும் ரீகனின் விளம்பரங்களைக் கனடா தவறாகப் பயன்படுத்தியதாகவும் அது போலியானது என்றும் அண்மையில் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை அறிவித்திருந்ததை டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடுமையான அமெரிக்க வரி விதிப்பிற்குத் தளர்வு வழங்க கோரி கனடா பிரதமர் மார்க் கார்னி டிரம்பைச் சந்தித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த எதிர்பாரா முடிவு வெளிவந்துள்ளது.

1987ஆம் ஆண்டு கனடாவின் வானொலிக்கு ரீகன் வழங்கிய உரையிலிருந்து குரல் மற்றும் காணொளி பதிவுகளை Ontario கூட்டரசு அரசாங்கம் பயன்படுத்தியதாக அந்த அறக்கட்டளைத் தெரிவித்தது.

ரீகன் வழங்கிய உரையைத் திரித்துக் கூறிய அந்த விளம்பரம் சட்ட நடவடிக்கைகளுக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக டொனல்ட் டிரம்ப் கூறினார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.