ஷா ஆலம், அக் 24: ஹிஜ்ரா சிலாங்கூர் தொழில்முனைவோர் இனி தங்களது கடன் தொகையை எளிய முறையில் செலுத்தலாம். இதற்காக ஆம்பேங்க் வெர்சுவல் அக்கவுண்ட் (AmBank Virtual Account) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறை மூலம் தங்கள் வசதிக்கேற்ப பங்கேற்பாளர்கள் மூன்று முக்கிய தளங்கள் வழி பணம் செலுத்தலாம்:
1.AmBank கவுண்டர்
2.AmBank நாணய வைப்பு இயந்திரங்கள் (CDM)
3.இணைய வங்கி பரிமாற்றங்கள் (FPX/IBG)
கவுண்டர் அல்லது CDM வழியாக பணம் செலுத்தும் முறை:
1.‘Deposit ke Akaun Semasa/Simpanan’ தேர்வு செய்யவும்.
2.வெர்சுவல் அக்கவுண்ட் எண்ணை உள்ளிடவும்.
3.பங்கேற்பாளரின் பெயர் திரையில் சரிபார்க்கவும்.
4.தொகையை உள்ளிட்டு பரிமாற்றத்தை முடிக்கவும். பணத்தை செலுத்திய பிறகு ஹிஜ்ரா அலுவலர்களுக்கு தகவல் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.
ATM அல்லது பிற வங்கிகளின் இணைய சேவை மூலம் பணம் செலுத்தும் முறை:
1.‘Pemindahan Secara Instant’ தேர்வு செய்யவும்.
2.வெர்சுவல்அக்கவுண்ட் எண்ணை உள்ளிடவும்.
3.Akaun Semasa/Simpanan மற்றும் AmBank தேர்வு செய்து தொகையை உள்ளிடவும்.
4.பெயர் திரையில் சரிபார்த்து பரிமாற்றத்தை உறுதிசெய்யவும்.
இந்த நடவடிக்கை தொழில்முனைவோரின் கடன் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குவதோடு, பரிமாற்றங்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள உதவும் ஹிஜ்ரா சிலாங்கூர் தெரிவித்தது.
கூடுதல் தகவல்களுக்கு, தொழில்முனைவோர் ஹிஜ்ரா சிலாங்கூர் அதிகாரப்பூர்வ இணையதளம் www.hijrahselangor.com அல்லது ஹிஜ்ரா அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.




