கோலாலம்பூர், அக்டோபர் 23: மலேசிய வானிலைத் துறையான மெட்மலேசியா தற்போது மலேசிய தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பை மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தொடர்பான தகவல்கள் விரைவாக வெளியிடப்படும்.
தற்போதைய அமைப்பில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தொடர்பான ஆரம்ப எச்சரிக்கை எட்டு நிமிடங்களில் வழங்கப்படுகிறது. அந்த தகவல் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கும் மக்களுக்கும் பல்வேறு வழிகளின் மூலம் அனுப்பப்படுகிறது என்று இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி தெரிவித்தார்.
மெட்மலேசியா தற்போது அமைப்பை மேம்படுத்தி, 2026க்குள் எச்சரிக்கை தகவலை ஆறு நிமிடங்களில் வெளியிடும் வகையில் பணிகள் மேற்கொண்டு வருகிறது,” என அவர் இன்று நாடாளுமன்ற கேள்வி-பதில் அமர்வில் தெரிவித்தார். SAATNM அமைப்பு தினமும் 24 மணி நேரமும் இயங்குகிறது மற்றும் இது தேசிய நிலநடுக்க மற்றும் சுனாமி இயக்க மையத்தால் கண்காணிக்கப்படுகிறது என்று அவர் கூரினார்.
தற்போது நாட்டில் மொத்தம் 80 நில அதிர்வு நிலையங்கள் உள்ளன. இவை 323 சர்வதேச நிலையங்களுடன் நேரடி தரவு பரிமாற்றத்தையும் கொண்டுள்ளன. மேலும் இத்தகைய பகுதிகளில் திட்டங்களை முன்னெடுக்க விரும்பும் டெவலப்பர்கள் அவை பற்றிய தரவுகளைப் பரிசீலித்து, அந்த வழிகாட்டி விதிமுறைகளுக்கு இணங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மற்றும் ஆணையங்களும் இதற்கான தொழில்நுட்ப ஆலோசனையை வழங்கும் பொறுப்பு வகிக்கிப்பதாக அவர் தெரிவித்தார்.




