கோலா லங்காட், அக் 23: மாணவர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்சா ஏ தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இந்த வாரம் தொடங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி முக்கியமாக நான்கு மாவட்டங்களில் வழங்கப்படும். உலு லங்காட், கோம்பாக், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மையமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த இலவச தடுப்பூசி வழங்கல் சிலாங்கூர் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் மற்றும் சிலாங்கூர் கல்வித் துறையின் கீழ் நடைபெறும்.
இந்நான்கு மாவட்டங்களிலும் இன்ஃப்ளூயன்சா நோய்த்தொற்று அதிகம் பதிவாகியுள்ளதால் அங்கு முதலில் தொடங்குவதாக அவர் கூறினார்.
மேலும் விரைவில் எத்தனை பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பதற்கான முழு அறிக்கையையும் வெளியிடுவோம் என்று இன்று சிஜாங்காங் ஜெயா தேசிய இடைநிலைப்பள்ளிக்கு சென்றபோது அவர் கூறினார்.
இதற்கு முன்பு, சிலாங்கூர் அரசு இன்ஃப்ளூயன்சா ஏ தடுப்பூசியுக்காக RM1 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த தடுப்பூசி நான்கு மாவட்டங்களிலுள்ள 12,500 மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும், இதன் செயல்பாட்டை பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உருப்பினர் தலைமையேற்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.




