சிப்பாங், அக் 23: 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கு மலேசியாவுக்கு முதலில் வந்த ஆசியான் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளில் லாவோஸ் வெளியுறவு அமைச்சர் தொங்சவான் போம் விஹானே ஆவார்.
அவர் தனது மனைவி வட்சனா போம் விஹானே உடன் னெற்று இரவு சுமார் 8.25 மணியளவில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்(KLIA) வந்தடைந்தார்.
இந்த ஆண்டுக்கான ஆசியான் தலைமைப் பொறுப்பை வகிக்கும் மலேசியா, “ஒற்றுமையும் நிலைத்தன்மையும்” என்ற தலைப்பில், அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூரில் 47வது ஆசியான்உச்சநிலை மாநாட்டை நடத்துகிறது.
இம்மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற முக்கிய உரையாடல் நாடுகளுடன் ஆசியான் உறுப்புநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து இதுவே மிகப்பெரிய ஆசியான் கூட்டமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது, இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன பிரதமர் லீ கியாங் , பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.




