ஷா ஆலம், அக் 21 : அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படை பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று எட்டு இடங்களில் காலை 9 மணிக்குத் தொடரும்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 2 கிலோ சமையல் எண்ணெய் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட் 2025-இல், JER திட்டத்திற்காக RM30 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இவ்வாண்டின் இறுதிக்குள் 10 “ எஹ்சான் மார்ட்” (Ehsan Mart) கிளைகள் திறக்கப்படும் என மாநில அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது. தற்போது, சுங்கை துவா மற்றும் பண்டான் இண்டா ஆகிய இடங்களில் கிளைகள் செயல்படுகின்றன.
இந்த மார்ட், சந்தை விலையை விட 10 முதல் 15 சதவீதம் குறைவாக அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறது. எஹ்சான் மார்ட் திட்டம், JER விற்பனை முயற்சியின் மேம்பட்ட வடிவமாக 2027 ஆம் ஆண்டிற்குள் 56 தொகுதிகளில் விரிவுபடுத்தப்படும்.
இதற்கு முன்பு, JER திட்டத்தை சிறப்பாக நடத்தி வந்ததற்காக PKPS நிறுவனம் “தரமான மேலாண்மை விருது” பெற்றது. மேலும், மிகப்பெரிய மானிய விற்பனை நிகழ்வை நடத்தியதற்காக மலேசிய சாதனைப் புத்தகத்தில் பெயர் பதித்தது.




