ad

சிலாங்கூர் மடாணி கல்வி மாநாடு தொடக்கம் — புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு ஆரம்பம்

22 அக்டோபர் 2025, 5:13 PM
சிலாங்கூர் மடாணி கல்வி மாநாடு தொடக்கம் — புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு ஆரம்பம்
சிலாங்கூர் மடாணி கல்வி மாநாடு தொடக்கம் — புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு ஆரம்பம்

ஷா ஆலம், அக்டோபர் 22 — சிலாங்கூர் அரசு மாநிலத்தின் கல்வி சூழலை வலுப்படுத்த புதிய கொள்கைகளை உருவாக்கும் நோக்கில் “சிலாங்கூர் மடாணி கல்வி மாநாட்டை” தொடங்கியுள்ளது என்று மாநில மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அவர் கூறுகையில், புதிய கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதுடன், இந்த முயற்சி பள்ளி பாதுகாப்பு பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துகிறது, இது தற்போது பொது மக்களிடையே அதிகரித்து வரும் கவலையாக உள்ளது.

“இது விரிவான பங்குதாரர்களைச் சேர்த்துக் கொண்டு கல்வி பிரச்சனைகளை முழுமையாக ஆய்வு செய்யும் — கல்வி உள்ளடக்கம் முதல் பாதுகாப்பு மற்றும் பிற தொடர்புடைய அம்சங்களையும் ஆராயும். இந்த மாநாடு கல்வி மறுசீரமைப்பு மன்றத்தின் பின்தொடர்பாகும், மேலும் எதிர்காலத்தில் பல்வேறு குறிக்கோள் குழுக்களுடன் நாம் தொடர்ந்து கலந்துரையாடி, சிலாங்கூரின் கல்வி சூழலை வலுப்படுத்தும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கும் வரை பணியாற்றுவோம்,” என்று அவர் கூறினார்.

மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி, இன்று ஷா ஆலத்தில் உள்ள ராஜா துன் உடா நூலகத்தில் நடைபெற்ற “கல்வி மறுசீரமைப்பு மற்றும் நவீன சவால்கள்: திசையுடன் அல்லது திசையின்றி?” என்ற ஆய்வரங்கத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

இந்த அரங்கம் சிலாங்கூர் மாணவர் மேம்பாட்டு செயலாளர் முகமது ஹிதாயத் முகமது சாஃபி  நடத்தினார், இதில் பத்துதீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷீத் மற்றும்  மலேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் (NUTP)  தலைவர் அமினுத்தீன் அவாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், முன்னாள் மலேசிய இளைஞர் கவுன்சில் தலைவர் செனட்டர் ஜூபித்ரி ஜோஹா மற்றும்  சுல்தான் இத்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (UPSI) துணைவேந்தர் ப்ரொஃப். டத்தோ’ மட் அமீன் மட் டாஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த மன்றம், தற்போதைய கல்வி அமைப்பின் சவால்கள் மற்றும் திசையை மதிப்பிடுவதற்கு பல நிபுணர்களை ஒன்றிணைத்து கலந்துரை-யாடிய மலேசியாவின் முதல் மாநிலமாக  சிலாங்கூரை மாற்றியது. இது மாரா தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் (UiTM) உட்பட பல கல்வி நிறுவனங்களிலிருந்து விரிவுரையா-ளர்கள் மற்றும் மாணவர்களையும் ஈர்த்து, நிகழ்வை சிறப்பித்தது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.