ஷா ஆலாம், அக் 22: அனுமதியின்றி வெளிநாட்டவர் ஒருவர் நடத்திய முடி திருத்த கடை, அக்டோபர் 15 அன்று தெலுக் பங்லிமா காராங் பகுதியில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் கோல லாங்காட் நகராட்சியால் முற்றுகையிடப்பட்டது.
காலை 11.20 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், அந்த வணிக வளாகம் நகராண்மைக்கழகத்தின் அனுமதி உரிமம் இன்றி செயல்பட்டது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது.
“சோதனையின் போது, கடை உரிமையாளர் செல்லுபடியாகும் உரிமத்தை காட்டத் தவறியதாலும் மேலும் அந்த வணிகத்தை நடத்திவந்த நபர் வெளிநாட்டவர் எனவும் உறுதி செய்யப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் உரிமம் இன்றி நடைபெறும் எந்தவொரு வணிகத்தையும், குறிப்பாக வெளிநாட்டவர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளையும், மிகுந்த கவனத்துடன் கோல லாங்காட் நகராண்மைக்கழகம் பார்வையிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் பொதுமக்கள் தங்களின் வணிக உரிமங்களை புதுப்பித்து, விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்; இல்லையெனில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.