ஷா ஆலம், அக் 22: கோத்தா திங்கி அருகே, தஞ்சோங் பாலாவ்விலிருந்து செடிலி நோக்கி செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில், கார் ஒன்று செம்பனைத் தோட்டத்து மரத்தில் மோதி தீப்பிடித்ததில் இரண்டு பேர் கருகி உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 4.48 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து எட்டு வீரர்கள் சம்பவ இடத்துக்கு புறப்பட்டதாக பெனாவார் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவின் இயக்கத் தளபதி, மூத்த தீயணைப்பு அதிகாரி II ஃபைசல் அஹ்மத் தெரிவித்தார்.
தோயோத்தா வியோஸ் கார் ஒன்று மரத்தில் மோதியதாகவும், அதன் பிறகு 93 சதவீதம் எரிந்துவிட்டதை கண்டறிந்தோம்.
விபத்தில் 21 வயது ஆண் மற்றும் ஒரு பெண் வாகனத்துக்குள் சிக்கி உயிரிழந்தனர் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். மேலும் தீ அணைக்கும் பணிகள் காலை 6.11 மணிக்கு முழுமையாக நிறைவடைந்ததாக அவர் கூறினார். இருவரின் உடல்கள் மேல் கட்ட விசாரணைக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.