ஷா ஆலம், அக் 22: கல்வி சீர்திருத்தமும் இன்றைய சவால்களும்: ஒரே திசையில் செல்கிறதா அல்லது திசை மாறுகிறது? என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்தை இன்று www.mediaselangor.com மூலம் பிரத்யேகமாக காணலாம்.
இந்நிகழ்ச்சி இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை ராஜா துன் உடா நூலக அரங்கில் நடைபெறும். இதை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ' அமிருடின் ஷாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
கருத்தரங்கத்தில் பங்குபெறும் முக்கிய பேச்சாளர்கள் பத்து தீகா மாநில சட்டமன்ற உறுப்பினர், தேசிய ஆசிரியர் சேவை சங்க (NUTP) தலைவர், மலேசிய இளைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செனட்டர் டாக்டர் ஜுஃபித்ரி ஜோஹா, சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (UPSI) துணைவேந்தர் ஆவர்.
இந்த கருத்தரங்கத்தின் நேரடி ஒளிபரப்பை மீடியா சிலாங்கூரின் அனைத்து அதிகாரப்பூர்வ தளங்களிலும் காணலாம்.