ஷா ஆலம், அக் 21: கிளந்தான் அணியின் கோல்கீப்பர் பயிற்சியாளர் வான் கமாலுசமான் முகமத், அக்டோபர் 12 அன்று நடைபெற்ற ராஜா ராஜா தங்கக் கோப்பை (PERR) 2025 போட்டியில் ஏற்பட்ட கலவரத்துக்கு பிறகு உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அக்டோபர் 14 அன்று நடைபெற்ற ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்துக்குப் பிறகு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என மலேசிய மலாய் கால்பந்து சங்கத்தின் (PBMM) பொதுச்செயலாளர் நசேரி ஹுசின் தெரிவித்தார்.
அந்தப் போட்டியில் சிலாங்கூர் வீரரை குத்தியதற்காக 2025/2026 பருவத்தில் மலேசிய மலாய் கால்பந்து சங்கம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ளத் தடை செய்யப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித வன்முறை அல்லது தூண்டுதல் நடவடிக்கைகளுக்கும் இடமளிக்காது என்றும் அனைத்து அணிகளும் விளையாட்டை மதித்து ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.