காப்பார், அக் 21: மண் லாரி ஒன்று குப்பை லாரி மற்றும் இரண்டு கார்களை மோதியதில் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று காலை சுமார் 9.07 மணியளவில் பெக்கான் மேரு அருகே நிகழ்ந்தது.
காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மூத்த தீயணைப்பாளர் அஹ்மத் ஃபுவாட் நஸ்ருதீன் ஜோஹாரி தலைமையிலான ஒரு குழு அவசர அழைப்பைப் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பேச்சாளர் தெரிவித்தார்.
தொடக்ககட்ட விசாரணையில், மண் லாரி குப்பை லாரியுடன் மோதியதுடன், அதே பாதையில் சென்ற இரண்டு மைவி காற்களையும் மோதியது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
குப்பை லாரியில் பயணம் செய்த மூன்று வெளிநாட்டினர்கள் காயமடைந்துள்ளனர். அதில் இருவரின் காலில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனைக்கு (HTAR) அனுப்பப்பட்டனர்.