புத்ரா ஜெயா, அக் 20;- தீபாவளி என்பது தீபங்களின் ஒளி வரிசையை பிரதிபலிக்கிறது. தீமைக்கு எதிராக நன்மை வெற்றி கொண்டதையும் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறந்ததையும் குறிக்கும் உன்னதப் பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த இனிய தினத்தை குடும்பத்தினருடனும் சக இன நண்பர்களுடனும் இணைத்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். இது போன்ற பண்டிகைகளை நாம் மகிழ்ச்சியுடனும் சுபிடசத்துடனும் கொண்டாடுவதற்கு மிகவும் முக்கியமானது நிலையான நாட்டின் ஆட்சி, நீடித்த அமைதி அந்த அமைதிக்கு வித்திட்ட மடாணி அரசுக்கு இவ்வேளையில் நன்றி கூறுவோம்.
பெட்ரோல் விலை குறைப்பு, சாரா உதவி நிதி ஆகிய திட்டங்களோடு தீபாவளிக்காக பிரத்தியேகமாக பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை, டோல் கட்டண விலக்களிப்பு போன்ற சலுகைகளை அறிவித்துள்ள அரசுக்கு இந்த இனிய வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வோம். கனவுகள் நிறைவேறவும் தீபாவளியைப் போலவே ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமையவும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ஜஸ்டின் ராஜ் சவரிமுத்து
கெஅடிலான் சிலாங்கூர் அமைப்பு செயலாளர்