ஷா ஆலம், அக் 20: பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தமா பகுதியில் பள்ளிக்குள் குத்திக்கொலை செய்யப்பட்ட இளம் மாணவியின் இறுதி அஞ்சலி இன்று துயரநிலையில் நிலவியது.
மாணவியின் விருப்பமான நீலம் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட 100 பலூன்கள் வானில் விடப்பட்டன. இது, அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையும் ஆசீர்வாதத்தையும் குறிக்கும் சின்னமாகும்.
ஹரியான் மெட்ரோ வெளியிட்ட தகவலின்படி, குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள்அனைவரும் கூடிவந்து மாணவிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து குடும்பத்தினருடன் பிரார்த்தனைக்கு பின்னர் மாணவியின் வாழ்க்கைப் பயண வீடியோ போடப்பட்டது.
கடந்த அக்டோபர் 14 அன்று நடந்த சம்பவத்தில், அந்த மாணவி பள்ளி கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். விசாரணையில், சம்பவ இடத்தில் இரண்டு கூர்மையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.