கோலாலம்பூர், அக் 20: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், தீபாவளி பெருநாளை முன்னிட்டு மக்களிடம் ஒற்றுமையைப் பேணும் மனப்பாங்குடன், உதவி தேவைப்படுவோருக்கு இரக்கம் காட்டி, நாட்டின் வலிமையின் அடித்தளமான சகோதரத்துவ உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
பல கலாச்சாரங்களும், மதங்களும் நிறைந்த நமது நாட்டில், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் உணர்வை எப்போதும் வளர்த்துக் கொள்ளவும், நிலைநிறுத்தவும் வேண்டும் என அவர் கூறினார்.”
இந்த ஆண்டு தீபாவளி நன்றி உணர்வோடு, புத்துணர்ச்சி மிக்க சிந்தனையுடன் கொண்டாடப்பட வேண்டும்; அதன் மூலம் மக்களின் மரியாதையும் நிலையும் உயர்ந்து, மேலும் ஒற்றுமையும் செழிப்பும் நிறைந்த மலேசியாவை நோக்கி நாம் முன்னேறுவோம்,” என அவர் இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.