கோலாலம்பூர், அக் 20: இன்று காலை 6.44 மணிக்கு, இந்தோனேசியாவின் தானிம்பார் தீவு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.0 அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
மலேசிய வானிலைத் துறையான மெட்மலேசியா வெளியிட்ட அறிக்கையில், 118 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இந்தோனேசியாவின் அம்போன் தீவிலிருந்து தென்கிழக்கே 511 கிலோமீட்டர் தூரத்தில் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனவும் அத்துறை தெரிவித்துள்ளது.