ஷா ஆலம், அக் 20: சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள், இனம் சமயங்களுக்கும் இடையிலான ஒற்றுமை மற்றும் ஐக்கிய உணர்வை நிலை நிறுத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தீபாவளி 2025-ஐ முன்னிட்டு வெளியிட்ட தனது வாழ்த்துச் செய்தியில், இந்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடப் படுவதோடு, சிலாங்கூரின் அமைதி மற்றும் ஒற்றுமையின் அடித்தளமான பரஸ்பர மரியாதை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை மக்கள் தொடர்ந்து பேணிச் செல்ல வேண்டும் என அவர் கூறினார்.
மேலும் சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் ராணி தெங்கு ஆகியோர், சிலாங்கூர் மாநிலத்திலும் நாடு முழுவதும் வாழும் அனைத்து இந்து மதத்தினருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த பெருநாள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுவது, இன-மத ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநிறுத்தும் உறுதியையும் மக்கள் தொடர்ந்தும் பேணிச் செல்ல வேண்டும் என அவர்கள் தனது வாழ்த்து தெரிவித்தார்கள்.
“தீபாவளி என்பது இருளை வெல்லும் ஒளியின் அடையாளம். இது நம் அனைவருக்கும் உணர்வு, நன்மை மற்றும் அன்பின் மதிப்பை நினைவூட்டுகிறது என்று சுல்தான் ஷராபுதீன் தெரிவித்தார் .
“முன்னேற்றம் அடைந்த பல இன, மத மக்களைக் கொண்ட சிலாங்கூர் மாநிலம், எப்போதும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்து, பரஸ்பர மரியாதை, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
