ஷா ஆலம், அக் 18: சுங்கை கண்டிஸ் சட்டமன்ற தொகுதி சுற்றுவட்டாரங்களில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்க மூன்று திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் RM16 மில்லியன் மதிப்பிலான வெள்ளத் தடுப்பு திட்டம் நடைமுறையில் இருப்பதாகவும் அது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஜாவாவி அகமது முக்னி தெரிவித்தார் .
அத்துடன் , கார்டீனியா தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள இரண்டாவது திட்டத்தில், ஷா ஆலம் மாநகராட்சி அந்தப் பகுதியை பொழுதுபோக்கு பூங்காவாகவும் தண்ணீர் சேமிப்பு குளமாகவும் மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது. மற்றொரு திட்டம், மலேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏழு ஏக்கர் நிலத்தில் தண்ணீர் சேமிப்பு குளம் அமைப்பதற்கானது.
மேலும் இந்த அனைத்து திட்டங்களும் நிறைவு பெற்ற பின், வழக்கத்தை விட அதிக மழை பெய்தாலும் நீர்ப்பெருக்கு நிலையை கட்டுப்படுத்தும் திறன் பெறும் என்று அவர் கூறினார்.