கோலாலம்பூர், அக் 18: சமீபத்தில் பள்ளிகளில் இடம்பெற்ற சில குற்றச் சம்பவங்களை அடுத்து, கல்வி அமைச்சு முழுமையான பொறுப்பை ஏற்று, பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் உறுதியளித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதவாறு, கல்வி பயிலும் இடங்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான சீர்திருத்தங்களை அமைச்சு விரைவாக மேற்கொள்ளும் என அவர் கூறினார்.
மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூகத்தில் அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதற்காக, பல்வேறு மேம்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் இந்த சவாலான காலத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்த ஆதரவை வழங்கிய பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் உறுப்பினர்களுக்கு நன்றியை தனது முகநூல் பதிவில் பதிவிட்டிருந்தார்.
“எப்போதும் உற்சாகத்தையும் ஆதரவையும் வழங்கும் பெற்றோர்களுக்கு மனமார்ந்த நன்றி. பெற்றோர்களின் கவனமும் ஒத்துழைப்பும் இந்நேரத்தில் பள்ளியின் வலிமையை மீண்டும் கட்டியெழுப்புவதில் மிகவும் முக்கியம்,” என்று அவர் கூறினார்.