ad

பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து மெதுவாக நகர்கிறது

18 அக்டோபர் 2025, 8:42 AM
பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து மெதுவாக நகர்கிறது

கோலாலம்பூர், அக் 18: தீபாவளி பெருநாளை முன்னிட்டு பலர் தங்கள் ஊர்களுக்கு புறப்படுவதால், இன்று காலை தொடங்கி பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து மெதுவாக நகர்ந்ததாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது .

PLUS நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கி செல்லும் E1 பாதையில் சுங்கை பூலோ முதல் ராவாங் வரை, மற்றும் பண்டார் காசியா முதல் புக்கிட் தம்புன் வரை போக்குவரத்து மெதுவாக இருந்ததாகவும் அதேபோல், E2 பாதையில் செனாய் முதல் கூலாய் வரை வடக்கு நோக்கி, மற்றும் காஜாங் முதல் பாங்கி, புத்திரா மகோத்தா முதல் நீலாய் வரை தெற்கு நோக்கி போக்குவரத்து மெதுவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நேரத்தில், PLUS நெடுஞ்சாலையில் இன்று காலை இரண்டு விபத்துகள் பதிவாகியுள்ளன. இரண்டிலும் சாலை ஒரு பகுதி மூடப்பட்டதால் போக்குவரத்து மெதுவாக இருந்ததாக குறிப்பிடதக்கது. மேலும் தற்போது பெரும்பாலான பகுதிகளில் வானிலை நல்ல நிலையில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டவும், அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், மேலும் நெரிசலைத் தவிர்க்க பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தியது. புதிய போக்குவரத்து தகவல்களை அறிய, LLM ஹாட்லைன்

1-800-88-7752, WhatsApp (LLM Info Trafik), X, TikTok மற்றும் Facebook “Lembaga Lebuhraya Malaysia” அல்லது www.llm.gov.my TUJU மற்றும் MyJalan பயன்பாடுகள் வழியாகப் பெறலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.