ஷா ஆலம், அக் 18 – 2026ஆம் ஆண்டுக்கான சுக்மா மற்றும் பாரா சுக்மாவிற்கு இரண்டாவது குழு தன்னார்வலர்களின் முன் பதிவு, வரவிருக்கும் வார இறுதியில் நடைபெறும் ஆசியான் விளையாட்டு தொழில் கண்காட்சி (Asean Sports Industry Expo 2025) நிகழ்வை ஒட்டி சிறப்பாகத் திறக்கப்பட உள்ளது.
விளையாட்டு விழாவின் தன்னார்வக் குழுவில் சேர ஆர்வமுள்ள பொதுமக்கள், அக்டோபர் 17 முதல் 19 வரை செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள பதிவு கவுண்டரைப் பார்வையிடலாம்.
கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் பதிவு செய்யும் பார்வையாளர்களுக்கு 2026 சிலாங்கூர் சுக்மா சார்ந்த சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்படும்.
நாட்டின் மிகப் பிரமாண்டமான இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டான சுக்மா மற்றும் பாரா சுக்மா சிலாங்கூர் 2026, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து வரும் விளையாட்டு வீரர்கள், சாம்பியன் பட்டத்திற்காகப் போட்டியிடவுள்ளனர்.