.கிள்ளான், 18 அக்; அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வறுமையை ஒழிக்க சிலாங்கூர் அரசு இலக்கு வைத்துள்ளது என்று முதல்வர் கூறினார்.
இதுவரை, இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் சுமார் 2,000 நபர்கள் வறுமையின் விளிம்பில் இருப்பதாக மாநில மேம்பாட்டு நடவடிக்கை கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது என்று டத்தோ ஸ்ரீ ' அமிருடின் ஷாரி கூறினார்.
"முன்பு, எங்களிடம் பரம ஏழைகளின் பட்டியல் இருந்தது, நாங்கள் அமைதியாக இருக்கவில்லை; இல்திசாம் சிலாங்கூர் நிவாரண வழங்குநர்கள் (ஐ. எஸ். பி) திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான உதவிகளை வழங்குவதன் மூலம் நடவடிக்கை எடுத்தோம், மேலும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பதிவுகளை கண்காணித்தோம்.
இந்த முறை பலனளித்தது, தீவிர வறுமையை வெற்றிகரமாக ஒழித்தோம். இந்த ஆண்டு 2,000 பேர் வறுமைகோடு வரம்பிற்கு சற்று மேல் வாழ்வதையும் அவர்களுக்கு உதவி தேவை படுவதையும் நாங்கள் கண்டறிந்தோம். அவர்கள் பரம ஏழ்மையில் சிக்கி விடாமல் தடுக்கும் சில சூத்திரங்களை பயன்படுத்தி வருகிறோம்.
இதற்கிடையில், வறுமையை ஒழிப்பதற்கான சூத்திரம் வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் மேலும் வலுப்படுத்தப்படும் என்று அமிருடின் விளக்கினார்.
ஏழைகளைப் பொறுத்தவரை, சிலர் வேலை செய்ய முடியாமல், அவர்களின் வாழ்க்கைக்கு அடிப்படை ஆதரவு கிடைக்கும் வகையில் உதவி தேவைப் படுகிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பதிவுகளை கண்காணிக்க அதே முறை அல்லது சூத்திரத்தை பட்ஜெட்டில் முன்மொழிவோம்.
"சிலாங்கூர் செழிப்பான வாழ்க்கை உதவி (பிங்காஸ்) உள்ளிட்ட ஜக்காட், சமூக நலத்துறை உதவி போன்ற பிற உதவிகள் வழங்குவதோடு மாநில அரசின் முன் முயற்சிகளுக்கும் நாங்கள் உதவுவோம்" என்று அவர் கூறினார்.