ஷா ஆலம், அக் 17: இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, நான்கு உயர் ஆபத்துள்ள மாவட்டங்களில் உள்ள 12,500 மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்க சிலாங்கூர் மாநில அரசு RM1 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டம் அடுத்த வாரமே தொடங்க உள்ளதாகவும், உலு லங்காட், கோம்பாக், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்கள் முதற்கட்டமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன என்றும் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இத்திட்டம் மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தலைமையில் நடைபெறும்.
இந்த முடிவு, இன்று நடைபெற்ற மாநில செயற்குழு (MMKN) கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மாணவர்களிடையே தொற்று வேகமாகப் பரவுவது காரணமாக, இந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.