ஷா ஆலம், அக் 20: மலேசியா முழுவதும் உள்ள மக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி நமக்கு நினைவூட்டுவது ஒளி எப்போதும் இருளை வெல்லும், அன்பு எப்போதும் வெறுப்பை வெல்லும் என்பதையே.
ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் நம்பிக்கையும் ஒற்றுமையும் என்ற ஒளியை நாம் தொடர்ந்து ஏற்றுவோம் என்று சிலாங்கூர் மாநில முதலீட்டு, வர்த்தகம் & இயக்கம் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு இங் ஸீ ஹான் தனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.