ஷா ஆலம், அக் 20 - “நாம் முன்னேறுவோம் ஒன்றாக” என்ற உணர்வுடன், முதலில் நான் சிலாங்கூர் மாநிலத்திலும் மலேசியா முழுவதும் வாழும் அனைத்து இந்து மதத்தினருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிலாங்கூர் என்பது பல இன, சமுதாய மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் வாழும் ஒரு மாநிலமாகும். அதில் இந்திய சமுதாயம் மாநிலத்தின் பொருளாதாரம், கலாசாரம், மரபு மற்றும் சமூக ஒற்றுமை போன்ற துறைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.
மேலும் மாநில அரசு எப்போதும் அனைத்து சமூகங்களின் பங்களிப்பையும் மதித்து, வீட்டு வசதி, கலாச்சார இடங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் சமமாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்தி வருகிறது.
நாம் அனைவரும் இந்த தீபாவளியை அன்பு, அமைதி மற்றும் ஒற்றுமையுடன் கொண்டாடுவோம். தீபாவளி ஒளி நம் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் செழிப்பு பொழியட்டும் என்று சிலாங்கூர் மாநில வீடமைப்புத் மற்றும் பண்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு போர்ஹான் அமான் ஷா வாழ்த்தினார்.