ஷா ஆலம், அக் 20 - சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக இந்த தீபாவளி பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும், தன் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் சிலாங்கூர் மாநில இஸ்லாம் மத விவகாரங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் ஃபஹ்மி ஙா .
இந்த ஒளியின் பெருநாள் நம் குடும்ப உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மாநிலத்தின் பல்வேறு இன மக்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நண்புத்துவத்தை வளர்க்கவும் ஒரு அழகான வாய்ப்பாக அமையட்டும் என்றார் அவர்.