ஷா ஆலம், அக் 19- இந்நாளில், 2025 ஆம் ஆண்டின் தீபாவளி பெருநாளை முன்னிட்டு, அனைத்து இந்திய சமூகத்தினருக்கும், மேலும் மலேசியாவின் அனைத்து மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் சிலாங்கூர் மாநில உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ இங் சுய் லிம்.
இந்நாளில் ஒளி இருளை வெல்வது போல், நம்பிக்கையும் ஒற்றுமையும் நம் வாழ்க்கையை ஒளிரச்செய்யட்டும். தீபாவளி என்பது வெறும் இந்திய சமூகத்தின் திருநாள் மட்டுமல்ல, மாறாக மலேசியா போன்ற பல இன மக்களைக் கொண்ட நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு பெருநாளாகும்.
மலாய், சீனம், இந்தியர் ஆகிய அனைவரும் இணைந்து இந்த ஒளியின் பெருநாளை கொண்டாடுவது நமது மலேசிய ஒற்றுமையின் அழகிய சின்னமாக திகழ்கிறது. வீட்டுக்கு வீடு சென்று வாழ்த்துகள் பகிர்ந்து கொள்ளும் நமது பண்பாடு உலக சுற்றுப்பயணிகளை கவர்கின்றது.
இந்த தீபாவளி ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும். நாம் ஒன்றிணைந்து, ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தில் வளர்த்திட வாழ்த்துகள்.
டத்தோ இங் சுய் லிம் அவர்களின் தீபாவளி வாழ்த்து
19 அக்டோபர் 2025, 10:30 AM