ஷா ஆலம், அக் 19- தீபாவளி பெருநாளை முன்னிட்டு, மலேசிய மக்களுக்கு, குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த சிலாங்கூர் மாநில மக்களுக்கு கிராம மேம்பாட்டு, ஒற்றுமை & நுகர்வோர் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ரிசாம் இஸ்மாயில் தனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
ஒளியின் திருநாள் எனப்படும் இந்தப் பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் தொடர்ந்த வெற்றியை ஒளிரச் செய்யட்டும்.
பல்வகை சமூகங்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தி, நம்முடைய நாட்டின் சமநிலை, அன்பு மற்றும் சகாப்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தத் திருநாளை கொண்டாடுவோம்.
இந்நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் போது, சாலையில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பை முக்கியமாகக் கருதி, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு தமது வாழ்த்தில் கேட்டுக்கொண்டார்.