ad

பள்ளியில் தாக்கப்பட்டு இறந்த மாணவி மிகுந்த திறமை மற்றும் ஒழுக்கமுடைவர்

17 அக்டோபர் 2025, 3:57 AM
பள்ளியில் தாக்கப்பட்டு இறந்த மாணவி மிகுந்த திறமை மற்றும் ஒழுக்கமுடைவர்
பள்ளியில் தாக்கப்பட்டு இறந்த மாணவி மிகுந்த திறமை மற்றும் ஒழுக்கமுடைவர்

கோலாலம்பூர், அக் 17: பெட்டாலிங் ஜெயா பகுதியில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 14) நிகழ்ந்த கொடூரக் தாக்குதலில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்பாக, அம்மாணவியின் தாய் (வொங் லீ பிங்), தனது மகளை அமைதியான, ஒழுக்கம் மற்றும் பொறுப்பு உணர்வு நிறைந்தவராக வர்ணித்தார்.

தனது இளைய மகள் ஒரு விளையாட்டு வீராங்கனை என்றும், சமீபத்தில் தலைநகரில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

“தன் மகள் குறைவாகப் பேசினாலும், மிகுந்த தைரியம் கொண்டவர் மற்றும் செயல்களை திட்டமிட்டு செயல்படுத்தக்கூடிய திறமை கொண்டவர்,” என்று வொங் கூறினார்.

“அவள் எங்களை மட்டுமல்லாது, மற்றவர்களையும் மரியாதையுடன் நடத்துவார். பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல உறவை பேணுவார்,” என்றார் வொங் லீ பிங்.

நேற்று கோலாலம்பூரில் உள்ள நிர்வானா மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் தகவல்தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் உடனிருந்தார். அமைச்சரின் வருகை, குடும்பத்துக்கு அரசின் ஆதரவை உணர்த்தும் ஒரு நம்பிக்கையூட்டும் அறிகுறியாக அமைந்தது.

இச்சம்பவத்துக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பரவிய சில தவறான தகவல்கள் குறித்து கவலை தெரிவித்த வொங், பொதுமக்கள் உண்மையை மட்டுமே பகிரவேண்டும் என்றும், ஆதாரமற்ற வதந்திகளை பரப்பக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

“ஒரு குடும்பம் இழந்தது என்னவென்று உணராமல் அவ்வளவு சுலபமாக ஒருவர் பதிவிடக்கூடாது. எங்களுக்குப் போதிய வலியிருக்கிறது,” என்றார் அவர்.

இத்தகைய சம்பவம் மீண்டும் எந்த ஒரு பள்ளியிலும் நிகழக் கூடாது என்று வொங் கேட்டு கொண்டார்.

அத்துடன், மகளுக்காக உருவாக்கப்பட்ட நன்கொடைக்கான QR குறியீடு தவறாக பயன்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது என கூறி கவலை தெரிவித்தார்.

“நன்கொடையை உண்மையுடன் அளிக்க விரும்புவோர், கோலாலம்பூரிலுள்ள நிர்வானா மையத்தில் நேரடியாக செலுத்தலாம்,” என அவர் தெரிவித்தார்.

மாணவியின் இறுதி சடங்கு அக்டோபர் 20ஆம் தேதி, திங்கட்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.