கோலாலம்பூர், அக் 17: இன்று காலை பிலிப்பீன்ஸின் மிந்தனாவோ பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் கடுமையான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலையியல் துறை (MetMalaysia) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காலை 7.03 மணிக்கு நிகழ்ந்தது என தெரிவிக்கப்பட்டது. அதன் மையம் வடக்கு 9.8° மற்றும் கிழக்கு 126.2° என்ற நிலப்பரப்பில், சுரிகாவோ நகரத்திலிருந்து கிழக்கே 76 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் ஆழம் 52 கிலோமீட்டர் ஆக இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. . இருப்பினும், இது மலேசியாவிற்கு சுனாமி அபாயம் ஏற்படுத்தாது என வானிலை துறை உறுதிப்படுத்தியுள்ளது.
— பெர்னாமா