ஷா ஆலாம் அக்.16: எதிர்வரும் அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் சிலாங்கூர் மாநிலத்தில் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் தீபாவளி அன்பளிப்புகள் வழங்குவது, பொது உபசரிப்புகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
அவ்வகையில், கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வரும் நவம்பர் 1ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை JALAN MESRA 25/66, TAMAN SRI MUDA, 40400 SHAH ALAM எனும் முகவரியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
தித்திக்கும் தீபாவளி திருநாளை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் நோக்கில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியின் சார்பில் இவ்வாண்டு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பைச் சிறப்பிக்க சுற்று வட்டார மக்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கேட்டுக்கொண்டார்.