கோலாலம்பூர் அக்.16: பீட்தலைவன் 2025 போட்டி முதன்முறையாக AGENDA SURIA COMMUNICATION DEEPAVALI CARNIVAL இல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த இறுதி போட்டியில் டிஜே நேஷ் வாகை சூடிய நிலையில் அவர் 5 ஆயிரம் ரிங்கிட் பரிசு தொகையைத் தட்டி சென்றார்.
பல்வேறு மாநிலங்களிலிருந்து இறுதி போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான படைப்புகளை வழங்கி பொதுமக்களைப் பரவசப்படுத்தினர்.
பீட்தலைவன் 2025 இறுதிப்போட்டியில் உள்ளூர் கலைஞர்களான சைக்கோமந்த்ரா, சந்தேஷ் ஆகியோர் கலந்து கொண்டதோடு மக்களுக்குப் படைப்புகளை வழங்கி சென்றனர். டிஜே தாஸ், DJ NAUGHTY ஆகியோர் நடுவர்களாக தங்களின் பணிகளை செவ்வனே ஆற்றினர்.
பீட்தலைவன் 2025 இறுதிப்போட்டிக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் பெரும் ஆதரவினை வழங்கிய வேளையில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.
இந்த இறுதிபோட்டியை மருதி தேவா & கஜென் தொகுத்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.