பெட்டாலிங் ஜெயா அக்.16: சிலாங்கூர் மாநிலத்தின் புக்கிட் காசிங் சட்டமன்ற தொகுதியின் சார்பில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு 2025 நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீப ஒளி, ஒற்றுமை மற்றும் சமூக ஒருமைப்பாட்டின் உணர்வுகளைப் போற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மகிழ்ச்சி நிறைந்த காலைப் பொழுதினைச் சிறப்பாகக் கொண்டாட எங்களுடன் இணையுங்கள் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷாகரன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 25ஆம் தேதி, சனிக்கிழமை காலை 11 மணிக்கு, ஜாலான் டெம்பிளர் தோட்ட மாளிகை ( BANGUNAN PELADANG) என்ற முகவரியில் இந்த திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறவுள்ளது.
புக்கிட் காசிங்கில் இந்தத் தீபாவளியை ஒளியுடனும் அர்த்தமுள்ளதாகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.