ad

இந்திய சமூகத்திற்கான புதிய முன்முயற்சிகளுக்கு RM42.25 மில்லியன் ஒதுக்கீடு

16 அக்டோபர் 2025, 5:00 AM
இந்திய சமூகத்திற்கான புதிய முன்முயற்சிகளுக்கு RM42.25 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர் அக் 15: நாட்டிலுள்ள இந்திய சமூகத்திற்கு புதிய முன்முயற்சிகளுக்கு RM42.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார். இந்த கூடுதல் நிதிக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதில், RM8 மில்லியன் இலவச கல்விக் கட்டணத் திட்டத்திற்கு (TUISYEN PERCUMA) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 'கல்வி மடாணி' திட்டத்தின் கீழ் இயங்கும் 200 தமிழ்ப்பள்ளிகளை (SJKT) உள்ளடக்கிய முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், கற்பிக்கும் ஆசிரியர்களின் ஊதியமும் செலுத்தப்படும்.

மேலும், RM20 மில்லியன் இந்து வழிபாட்டுத் தலங்கள், சமுதாயம் மற்றும் கலாச்சார மையங்களுக்காக (RUMAH IBADAT HINDU JADI PUSAT KOMUNITI DAN KEBUDAYAAN) ஒதுக்கப்பட்டுள்ளது. 'தர்ம மாடாணி' திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 17, 2025 முதல் நவம்பர் 3, 2025 வரை www.perpaduan.gov.my இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம். ஒரு கோவிலுக்கு அதிகபட்சமாக RM20,000 வரை நிதி வழங்கப்படும். மீதமுள்ள நிதி செலவு மற்றும் செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும்.

மேலும், RM12.8 மில்லியன் 173 தமிழ்ப்பள்ளிகளுக்கு (SJKT) பழுதுபார்ப்பு மற்றும் தளவாடங்கள் கொள்வனவுக்காகச் செலவிடப்படவுள்ளது. RM7.95 மில்லியன் மாணவர் உதவித் திட்டத்திற்காக (PROGRAM PERANTI SISWA) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3,000 மாணவர்கள் மடிக்கணினிகளைப் பெறுவார்கள். இது YAYASAN PERKASA SISWA DIDK NEGARA மூலம் செயல்படுத்தப்படும்.

மேலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு ஐபிடி இடம் உறுதி செய்யப்படும். அடுத்ததாக,RM10 மில்லியன் ஆரம்பகால உயர்கல்வி நிறுவன சேர்க்கை உதவித் திட்டம் 5.0-க்கு (PROGRAM BANTUAN AWAL KEMASUKAN IPT 5.0) ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,485 மாணவர்கள் உட்பட 840 குடும்பங்கள் பயனடையும். சாதாரண மாணவர்களுக்கு RM2,000-ம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு (OKU) RM3,000-ம் வழங்கப்படும்.

இறுதியாக, RM3.5 மில்லியன் 'மித்ரா' தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு (PROGRAM PEMBASMIAN MISKIN TEGAR MITRA) ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,064 பயனாளிகளை உள்ளடக்கிய வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு 12 மாதக் காலத்திற்கு நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் பங்குபெறும் ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக RM1,750 வரை RM300 உதவித்தொகையைப் பெறுவார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.