கோத்தா கினபாலு, அக் 16: சபாவின் 17-வது மாநிலத் தேர்தல் (PRN) தொடர்பான முக்கியமான விவரங்களைத் தீர்மானிக்க, மலேசிய தேர்தல் ஆணையம் (SPR) இன்று ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது. இந்த கூட்டம், இங்குள்ள சபா கூட்டாட்சி அரசின் நிர்வாகத் தொகுதியில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
அத்துடன், கூட்டம் முடிந்ததும் காலை 11 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். இந்தச் சந்திப்பில் சபா மாநிலத் தேர்தலுக்கான முக்கியமான அறிவிப்புகள், அதாவது வேட்பாளர் பரிந்துரை நாள், முன்னதாக வாக்களிக்கும் நாள், வாக்களிக்கும் நாள் மற்றும் பிரச்சாரக் காலம் ஆகியவை தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, அக்டோபர் 6ஆம் தேதி, சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹஜிஜி நோர், சபா மாநில சட்டமன்றம் (DUN) கலைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது மாநிலத் தேர்தலை நடத்த வழிவகுத்தது.
– பெர்னாமா