ad

எம்.பி.எஸ்.ஏ. மறுசுழற்சி திட்டத்திற்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு

15 அக்டோபர் 2025, 6:46 AM
எம்.பி.எஸ்.ஏ. மறுசுழற்சி திட்டத்திற்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு

ஷா ஆலம், அக் 15 – மலேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு, கம்போங் ஜாலான் கெபுன், செக்சன் 30இல் ஷா ஆலம் மாநகர் மன்றம் நடத்திய மறுசுழற்சி மற்றும் தூய்மை திட்டம் உள்ளூர் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்வு சுற்றுச்சூழல் தூய்மையை ஊக்குவிக்கும் வகையில் சமூக பங்கேற்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள், மறுசுழற்சி பொருட்களை RM5 மதிப்புள்ள Speedmart வவுச்சருக்கு மாற்றும் வாய்ப்பைப் பெற்றனர். மேலும், ஒரு கிலோ பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்க்கு RM2.50 பணமாக வழங்கப்பட்டது என கம்போங் ஜாலான் கெபுனின் தலைவர் அமாட் முகிடின் டுசூகி தெரிவித்தார்.

“இந்த ‘Recycle & Reward’ திட்டத்தின் மூலம் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சரியான முறையில் சேகரிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும். அதேசமயம், மக்கள் பொருட்களை பணமாக மாற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது.

அதுமட்டுமில்லாமல், இந்தத் திட்டம் மூலம் வீடுகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதால் நல்ல சுற்றுசூழலை உருவாக்க முடியும் என்றார் அமாட்.

இத்திட்டம் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை பேணும் சமூக முயற்சியாகும் செயல்படுகிறது என அமாட் கூறினார். இது, பொதுமக்கள் மத்தியில் பொறுப்புணர்வையும் ஒத்துழைப்பையும் உருவாக்கும் ஒரு செயல்முறை என அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வில் மக்களும் அவர்களது குடும்பத்தினரும் வீடுகளிலிருந்து நேரடியாக மறுசுழற்சி பொருட்களை கொண்டு வந்து இந்நிகழ்வில் பங்கேற்றனர். இது, தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருப்பதை பிரதிபலிக்கிறது.

அதனுடன், எம்.பி.எஸ்.ஏ. மறுசுழற்சி மையத்தில் சேகரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், பயோடீசல் தயாரிக்கப் பயன்படுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.