டோஹா, அக் 15 - 2026 ஃபிஃபா உலக கிண்ண காற்பந்து போட்டிக்கு ஆசியா கண்டத்திலிருந்து சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகள் தேர்வு பெற்றன.
உலக கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தின் நான்காம் சுற்றில் இரு அணிகளும் முறையே முதல் இடத்தை கைப்பற்றிய நிலையில் தானியங்கி முறையில் இரு நாடுகளும் அடுத்தாண்டு கோடையில் நடைபெறும் ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றன.
ஜக்கிய அரபு அமீரக அணியை கத்தார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நிலையில் சவூதி அரேபியா- ஈராக் ஆட்டம் எந்தவொரு கோல் இல்லாமல் 0-0 என்று சமநிலையில் முடிவுற்றது.
2026 ஆண்டு ஃபிஃபா உலக கிண்ண காற்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன.
இந்த முறை உலக கிண்ண போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை 32இலிருந்து 48ஆக உயர்த்த உலக காற்பந்து சம்மேளனமான ஃபிஃபா முடிவெடுத்தது


