கோலாலம்பூர், அக் 15 - கடந்த அக்டோபர் 13 நிலவரப்படி, RON95 பெட்ரோலுக்கான மானியத் திட்டமான Budi Madani (BUDI95) மூலம் 11 மில்லியன் மலேசியர்களுக்கு மேல் இதுவரை நன்மை அடைந்துள்ளதாக பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
BUDI95 திட்டத்தின் பயனாளர்கள் பட்டியல், புதுப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருகிறத. இதன் மூலம் தகுதியுடைய எந்த குடிமகனும் திட்டத்திலிருந்து விலக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
“மின் பணப்பை (e-wallet) இல்லாதவர்கள் மற்றும் இணைய அணுகல் குறைவான பகுதியில் வசிப்பவர்களும் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,” என அமைச்சகம் மக்களவையில் அளித்த எழுத்துப் பதிலில் தெரிவித்தது.
BUDI95 திட்டத்தில், பல்வேறு தகுதி உறுதிப்படுத்தும் மற்றும் உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் MyKad டெர்மினல்களிலான நேரடி சரிபார்ப்பு, மற்றும் பெட்ரோல் நிலையங்களில் பணமாக மானிய தொகையை செலுத்தும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த பதில், தெனோம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிடுவான் ரூபின் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்டது. அவர், மத்திய தரவுத்தள மையமான பாடுவை RON95 மானியங்களுக்கான தகுதி கணிப்பில் பயன்படுத்துவது, சபா மாநில மக்களின் உரிமைகளை பாதிக்கக் கூடும் என்ற கருத்தை அவர் முன்வைத்திருந்தார்.
2025 அக்டோபர் முதல் வாரம் வரை, 23,000-க்கும் மேற்பட்ட படகு பயனாளர்கள் மற்றும் மீனவர்கள், தங்கள் உரிமைகளை உறுதி செய்து, இத்திட்டத்தின் கீழ் பயடைய அனுமதி வழங்கப்பட்டது என அமைச்சகம் குறிப்பிட்டது.