ஷா அலாம், அக் 15 – பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைபள்ளியில் நிகழ்ந்த 16 வயது மாணவி கொலை வழக்கில், 14 வயது மாணவன் ஏழு நாள்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு, இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஷாரில் அனுவார் அகமட் முஸ்தபா அவர்களால் பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு காவல்துறையின் விசாரணைத் தேவைக்காக வழங்கப்பட்டது என்று சினார் ஹரியான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மீது மலேசியக் குற்றவியல் சட்டப் பிரிவு 302 (கொலை) கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி காலை 9.10 மணியளவில், பள்ளியின் பெண்கள் கழிப்பறை அருகே நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில், 16 வயது மாணவி கத்தியால் தாக்கப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மலேசிய தேசிய காவல்துறை தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில், சந்தேகநபர் சம்பவம் நடந்த அதே நாளில் கைது செய்யப்பட்டதாகவும், இதுகுறித்த விசாரணை தொடர்கிறது என்றும் உறுதியளித்தார்.


