ராஜஸ்தான், அக் 15 - மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய் சால்மரில் உள்ள தையாத் பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று எரிந்த சம்பவத்தில் குறைந்தது 20 பேர் வரை பலியாகியுள்ளனர்.
மேலும், 16 பேர் படுகாயமடைந்ததாக இந்திய செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை செய்து வருவதாகக் காவல்துறை தரப்பு தெரிவித்தது.
ஜெய்சால்மரில் பஸ் தீ விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் சிங் கூறினார்.