ad

40 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோய் சம்பவங்கள் பதிவு

14 அக்டோபர் 2025, 8:49 AM
40 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோய் சம்பவங்கள் பதிவு
40 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோய் சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், அக் 14 - நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டில், மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்பப்பை மற்றும் கருப்பை ஆகியவற்றை உட்படுத்திய ஐந்து வகையான முதன்மை புற்றுநோய்களை உள்ளடக்கி 40 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் புற்றுநோயின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், அந்நோயிற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முயற்சிகள், தொடக்கக்கட்ட பரிசோதனை உட்பட பல்வேறு தேசிய வியூகத் திட்டங்கள் மூலம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

மார்பகம், பெருங்குடல், நுரையீரல், லிம்போமா, கல்லீரல், புரோஸ்டேட், லுகேமியா கர்ப்பப்பை, தைரோய்ட், கருப்பை போன்ற புற்றுநோய் 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் மலேசியாவில் பதிவான 10 முக்கிய புற்றுநோய்கள் ஆகும்.

மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை, கருப்பை புற்றுநோய் ஆகியவை பெண்களிடையே காணப்படும் 5 முக்கிய புற்றுநோய்களாகும். பெருங்குடல், நுரையீரல், புரோஸ்டேட், கல்லீரல், லிம்போமா புற்றுநோய் ஆகியவை ஆண்களிடையே காணப்படும் 5 முக்கிய புற்றுநோய்களாகும் என்றார் அவர்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்கப்பூர்வமான மற்றும் உயர் தொழில்நுட்ப சிகிச்சையைப் பெறுவதை உறுதிசெய்ய, சுகாதார அமைச்சு தற்போது நோய் எதிர்ப்பு சிகிச்சை, AI -ஐ பயன்படுத்திய சிகிச்சை முறை மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட புதிய சிகிச்சை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

மேலும், நாட்டில் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப, தொடக்கக்கட்ட சிகிச்சை அணுகுமுறையையும் நாட்டின் புற்றுநோயியல் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதும் சுகாதார அமைச்சின் முக்கிய கவனமாக தொடர்ந்து இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.