கோலாலம்பூர், அக் 13- நாட்டின் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத சேர்க்கைக்கான தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி திவெட் திட்டங்களில் சேர இன்று அக்டோபர் 13ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.
SPM தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தஹ்ஃபிஸ் மாணவர்கள், வாடகை மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் , அத்துடன் அனுபவமிக்கத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் விண்ணப்பிக்க வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, SPM தேர்ச்சி பெறாத இளைஞர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட காலச் சான்றிதழ் படிப்புகளை உள்ளடக்கிய பெர்டானா திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வருடத்திற்கு இரண்டு முறை திறக்கப்படும்.
mohon.tvet.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். தொழில் தேர்வில் உறுதியளிக்கும் TVET கல்வியைத் தேர்ந்தெடுத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்