சுங்கை பூலோ, அக் 13 - எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அத்தொகுதியைச் சேர்ந்த இந்தியர்களுக்கு 3,000 பரிசு கூடைகளை வழங்கினார்.
இந்நிகழ்வு வசதி குறைந்தவர்களும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான அடிப்படைப் பொருட்களை உள்ளடக்கிய அப்பரிசுக் கூடை பி40 பிரிவைச் சேர்ந்தவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், மடாணி திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த உதவி சமூக பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உதவும் என விளக்கினார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் வழங்கப்பட்ட இந்த பரிசு கூடையைச் சுற்றுவட்டார இந்தியர்கள் பெற்றுக் கொண்டதுடன் பிரதமர் தலைமையிலான மடாணி அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.
பெர்னாமா