புத்ராஜெயா, அக் 13: கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த நிர்வாகம் மற்றும் ஊழல், கசிவு போன்றவற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் மூலம் கிடைத்த சேமிப்பை அடிப்படையாகக் கொண்டு, வரியை அதிகரிக்காமல் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் நலனுக்காக அதிக பயன்களை வழங்க அரசு திறன் பெற்றுள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வரி உயர்வு மக்களுக்கு சுமையாக மாறக்கூடும் என்பதைக் கவனத்தில் கொண்டு, நிர்வாக திறனை மேம்படுத்தி, கசிவு மற்றும் வீண்செலவை குறைக்கும் வழியே தனது நிர்வாகத்தின் அடிப்படை தத்துவமாக எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தாம் மேற்கொள்ளும் பணிமுறைகளையும், அமைப்பையும் பரிசீலிக்க வேண்டும். அவை திறம்பட செயல்படுகிறதா, கசிவைத் தடுக்கிறதா, ஊழல் அல்லது கடத்தலைக் கட்டுப்படுத்துகிறதா என்பதை பார்க்க வேண்டும் என்று இன்று பிரதமர் துறை உடனான சந்திப்பில் தெரிவித்தார்.