அலோர் ஸ்டார், அக்டோபர் 13: எல்லை பாதுகாப்பு கட்டுப்பாட்டு முகம் (AKPS) நேற்று புக்கிட் காயு ஹிதம் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் 11 வெளிநாட்டினர் நுழைவதை தடுத்துள்ளது.
11 வெளிநாட்டினர்கள் நுழைவுத் தகுதிகளை பூர்த்தி செய்யாததுடன் உண்மையான சுற்றுலாப் பயணிகள் அல்ல என்று சந்தேகிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக AKPS புக்கிட் காயு ஹித்தாம் கொமாண்டர் SAC முகமட் நசாருடின் எம் நாசிர் தெரிவித்தார் .
தடுக்கப்பட்டவர்களில் இந்திய நாட்டைச் சேர்ந்த ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண், கொரியாவைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண், சீனாவைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆண் ஆகியோர் அடங்குவர். இவர்களின் வயது 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும் அவர்கள் அனைவரும் அதே நுழைவுப் புள்ளி வழியாக தங்கள் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். இந்நடவடிக்கை நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டு நிலைபெறுவதற்காக AKPS தொடர்ந்து மேற்கொண்டு வரும் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.