ad

மலேசியாவில் கபடி, வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது

13 அக்டோபர் 2025, 4:01 AM
மலேசியாவில் கபடி, வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது
மலேசியாவில் கபடி, வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது
மலேசியாவில் கபடி, வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது

ஷா ஆலம், அக் 13 - இந்தியாவில் தோன்றிய கபடி இப்போது வெறும் பாரம்பரிய விளையாட்டாக இல்லாமல், உடலும் மனதையும் சோதிக்கும் ஒரு சர்வதேச விளையாட்டாக மாறியுள்ளது. எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சுக்மாவில் சேர்க்கப்பட்டதன் மூலமாக மலேசியாவில் கபடி ஒரு முக்கியமான வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிறது. அதேசமயம், இந்த பாரம்பரிய விளையாட்டு மலேசியாவின் பன்முக மக்கள் ஒன்றாக இணைவதற்கான பாலமாகவும் இருக்கிறது.

மலேசியா பல சர்வதேச போட்டிகளில், குறிப்பாக ஆசிய விளையாட்டு மற்றும் தெற்காசிய கபடி சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் பங்கேற்று வருவதாகக் கபடி பயிற்றுநர் பாலமுருகனை மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மேலும், உள்ளூர் அளவிலும் மாநில, தேசிய மற்றும் பல்கலைக்கழக அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இது இளைஞர்களுகிடையே திறன்களை வளர்க்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் மலேசியா சுக்மா விளையாட்டுகளில் கபடி அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டு, நாட்டில் மேலும் விரிவடையவும் வளரவும் வாய்ப்பு பெற்றுள்ளது. மலேசியா கபடி பேரவையின் ஒழுங்கமைப்பு மற்றும் பயிற்சி திட்டங்கள் மூலம், இந்த விளையாட்டு தொழில்முறை தரத்திற்கு உயர்ந்து, பரவலாக மக்கள் மனதில் இடம் பெறும் விளையாட்டாக மாறி வருகிறது.

அடுத்தாண்டு சுக்மாவில் கபடியும் சேர்க்கப்பட்டியிருப்பது சிறப்பான ஒரு செய்தியாகும் என அவர் கருதினார். இது கபடி விளையாட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது. இதற்குக் காரணம், தற்போது பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை கபடியில் ஈடுபட அனுமதி வழங்கி வருகின்றனர். ஏனென்றால், இந்த விளையாட்டு தற்போது நாடாவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், தங்கள் குழந்தைகள் இதில் ஈடுப்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என பெற்றோர்கள் பெரிதும் நம்புகின்றனர் என்றார்.

இவற்றின் வாயிலாக அரசு அங்கீகாரம், விருதுகள், விளையாட்டு உதவித்தொகைகள், மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற பல லாபங்களைப் பெற முடியும். குறிப்பாக சுக்மா போன்ற தேசிய போட்டிகளில் பங்கேற்பது, விளையாட்டு வீரர்களுக்கான உயர் கல்வி மற்றும் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு போன்ற புதிய வாய்ப்புகளை திறக்கக்கூடியது.

எனவே, கபடியில் ஈடுபடுவதன் மூலம் ஒருவரின் உடல், மனம் மற்றும் வாழ்க்கைமுறையிலும் முன்னேற்றத்தை அடையலாம் என அவர் ஆணித்தரமாகப் பாலமுருகன் கூறினார்.

தற்போது தனது கபடி பயிற்சி வகுப்புகள் நான்கு மாநிலங்களில் சிறப்பாக நடைபெறுவதாக அவர் பெருமையாக தெரிவித்தார். கூடுதலாகப் பல பள்ளிகளிலும் கபடி பயிற்சி வழங்கி வருவதாகக் கூறினார். இதில் இந்தியர்களை தவிர பிற இன மாணவர்களும் ஆர்வமாகப் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.