கோலாலம்பூர், அக் 13 – அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் எல்.ஆர்.டி பாதையில் ஹாங் துவா மற்றும் புடு நிலையங்களுக்கு இடையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரேபிட் ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் அறிக்கையின்படி, தற்போது பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் பயணிகள் தங்கள் இலக்கை அடைய மாற்று ரயில் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்று ரயில் சேவைகள் செந்தூல் தீமூர் நிலையத்திலிருந்து வரும் ரயில்கள் புடு நிலையத்தில் திரும்பிச் செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன. புத்ரா ஹைட்ஸ் மற்றும் அம்பாங் திசையிலிருந்து வரும் ரயில்கள் Chan Sow Lin நிலையத்தில் திரும்பிச் செல்லும். அதே சமயம் Chan Sow Lin முதல் புடு வரை இடைநிலை ரயில் சேவை வழங்கப்படுகிறது என தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ரேபிட் ரெயில் நிறுவனம் பயணிகள் அனுபவிக்கும் சிரமத்திற்கும் அவர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.