ஷா ஆலாம், அக்டோபர் 13: சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) நவம்பர் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் செதியா மண்டபம், ஜேபிஜே நெகிரி சிலாங்கூர், ஜாலான் பாடாங் ஜாவா, செக்ஷன் 16 இல் நடைபெறும் திறந்த பொது ஏலம் நிகழ்ச்சியில் சுமார் 200 வகை வாகனங்களை ஏலத்தில் விட உள்ளது.
ஜேபிஜே சிலாங்கூர் வெளியிட்ட அறிவிப்பில், ஏலத்திற்கு இரு வகை வாகனங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இயக்க அனுமதி பெறக்கூடிய வாகனங்கள் மற்றும் இயக்க அனுமதி பெற முடியாத வாகனங்கள்.
ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் அக்டோபர் 29 முதல் நவம்பர் 4, வரை ஜேபிஜே சிலாங்கூர் நிர்வாகப் பிரிவில் இருந்து வாகன விவரங்கள் மற்றும் ஏல நிபந்தனைகள் அடங்கிய ஆவணங்களை பெறலாம். ஒவ்வொரு நகலும் RM100 கட்டணத்தில் வழங்கப்படும்.
மேலும், ஏலத்திற்கு வரும் வாகனங்களை பொதுமக்கள் நவம்பர் 3 மற்றும் 4 திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அதே இடத்தில் நேரில் பார்வையிடலாம்.
இந்த ஏலத்தில் மலேசியக் குடிமக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு 03-55669454 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.