ad

உலு சிலாங்கூர் நகராண்மை கழகப் பணியாளர் திடீர் மரணம்

13 அக்டோபர் 2025, 3:13 AM
உலு சிலாங்கூர் நகராண்மை கழகப் பணியாளர் திடீர் மரணம்

உலு சிலாங்கூர், அக் 13 - கடந்த 12 அக்டோபர் அன்று காலை, பத்தாங் காலி பகுதியில் தனியாக மிதிவண்டியில் பயணித்து கொண்டிருந்த உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தில் பணியாற்றி வரும் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

இச்சம்பவம், கோலாலம்பூர்–ஈப்போ நெடுஞ்சாலையின் 30ஆம் கிலோமீட்டர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் முன்பு நிகழ்ந்தது.

உயிரிழந்தவர் 39 வயதுடைய முகமட் சைஃபுல் இஸ்வான் ரொஸ்லான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் காலை 11.15 மணியளவில் காவல்துறைக்கு கிடைத்துள்ளது என உலு சிலாங்கூர் மாவட்ட காவல் தலைவர் சூப்பிரிண்டெண்ட் இப்ராஹிம் ஹுசைன் தெரிவித்தார்.

விசாரணையில், சைஃபுல் மிதிவண்டி ஓட்டும் போதே சுயநினைவு இழந்து கீழே விழுந்ததாக தெரிகிறது. அவரது உடலில் எந்தவொரு காயங்களும், தாக்குதலுக்கான அடையாளங்களும் காணப்படவில்லை. எனவே, இது ஒரு தவிர்க்க முடியாத உடல்நலக் காரணமாக ஏற்பட்ட மரணம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர்.

மரணத்தின் காரணம் உறுதி செய்யப்படாததால், அவரது உடல் கோலா குபு பாரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கு "திடீர் மரணம்" (Sudden Death Report – SDR) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் உலு சிலாங்கூர் காவல் நிலைய உதவி விசாரணை அதிகாரி சார்ஜென்ட் சித்தி கதிஜா நுஸ் அவர்களை 03-60641222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கிடையில் எம்பிஎச்எஸ் தனது சமூக ஊடகத் தளத்தில் மறைந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.